Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அரசன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. வெளியான அதிரடி அறிவிப்பு.!!

vijay sethupathi join arasan movie

அரசன் படத்தில் இணைந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் தற்போது அரசன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் இந்த படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப் புலி எஸ் தாணு அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி அரசன் படத்தில் இணைந்துள்ளதாக போஸ்டர் உடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

அதில் மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது என்று பதிவிட்டு இருக்கிறார். இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்து வருவது மட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்து வருகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது