Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி செய்த செயல், குவியும் வாழ்த்து

Vijay Sethupathi helped his comedy actor son

காமெடி நடிகரின் மகனுக்கு படிப்பிற்கு உதவியுள்ளார் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்கள் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வசூலில் 100 கோடியை தாண்டி மாஸ் காட்டியது. அடுத்ததாக ட்ரெயின் என்னும் படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்தை மிஷ்கின் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காமெடி நடிகர் தெனாலியின் மகன் வின்னரசன் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படித்து வருகிறார். இவரால் கல்வி கட்டணத்தை சரியாக கட்ட முடியாத சூழ்நிலையால் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளனர். உடனடியாக அவர் 76 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணத்தை அளித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் இந்த உதவி என் வாழ்நாள் இருக்கும் வரை மறக்க மாட்டேன் என நடிகர் தெனாலி கூறியிருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Vijay Sethupathi helped his comedy actor son

Vijay Sethupathi helped his comedy actor son