Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி.. வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

vijay-sethupathi-as-villian-in-maveeran movie

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. விக்ரம் வேதா படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி அதன் பிறகு தளபதி விஜய் வில்லனாக மாஸ்டர் படத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக பேட்ட படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து கமலுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆமாம் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்த இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

இப்படியான நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என நமது தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

 vijay-sethupathi-as-villian-in-maveeran movie

vijay-sethupathi-as-villian-in-maveeran movie