விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் மக்கள் செல்வனாக கொண்டாப்படுபவர். அண்மையில் அவருக்கு சிறப்பான ஹிட் படம் அமையவில்லை என்றாலும் அவர் மற்ற படங்கள் வில்லன் போன்ற மற்ற வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.
அவருக்கு அடுத்த விஜய்யுடன் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 800 என்ற இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் முத்தையா முரளி ஈழத்தமிழர்களை கொச்சையாக பேசியவர் என்பதுடன் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.
இந்நிலையில் அவர் இப்படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா வலியுறுத்தியிருந்தார்.
தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழர்களின் எதிர்ப்பை மீறி விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்தால் இழி துரோக வரலாற்றில் இடம் பெறுவார் என கூறி விரிவான கடிதம் அனுப்பியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை என்ற திரைப்படத்தை அப்படக்குழு அழைப்பை ஏற்று பார்த்தேன். அந்தப் படத்தில் விஜய் சேதுபதியை மக்கள் மருத்துவராகவே பார்த்தேன்; கிராமப்புற ஏழைகளுக்கு அவர் வாஞ்சையுடன் மருத்துவம் அளிக்கும் காட்சிகளில் நான் அவருக்குள் என்னைப் பார்த்தேன்.
ஆனால், முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அவரை மட்டைப்பந்து வீரராக எவரும் பார்க்க மாட்டார்கள்; மாறாக துரோகத்தின் சின்னமாகவே பார்ப்பார்கள் என கூறியுள்ளார்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…