தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தளபதி விஜய் தற்போது தன்னுடைய கடைசி மூன்று படங்களை இயக்கிய இயக்குனர்களை ஒரே நேரத்தில் சந்தித்துள்ளார். அதாவது பிகில் படத்தை இயக்கிய அட்லி, மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ள நெல்சன் ஆகியோரை சந்தித்துள்ளார்.
இவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படத்தை தளபதி விஜய் போட்டோ எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தளபதி விஜய் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
Picture courtesy @actorvijay ???? @Atlee_dir @Nelsondilpkumar pic.twitter.com/pP1H0QZRfi
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 5, 2022