Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் விஜய்..வைரலாகும் மாஸ் அப்டேட்

vijay-play-negative-role-in-new-movie

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அடுத்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, கோலிவுட்ல பிரபல இயக்குனராக திகழும் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தளபதி விஜய் மற்றும் தெலுங்கில் பிரபல நட்சத்திரமாக திகழும் நடிகர் மகேஷ்பாபு உடன் இணைத்து தயாரித்திருக்கும் கதை களத்தை இயக்குனர் முருகதாஸ் தளபதி விஜய் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்த புதிய கான்செப்ட்டை கேட்ட உடன் இந்த கதையை படித்து நடிகர் மகேஷ்பாபு ஒப்புக் கொண்டால் அந்த படத்தில் நான் நடிக்க தயார் என்று நடிகர் விஜய் ஓகே சொல்லியுள்ளார். அதாவது இந்த கதையின் சுவாரசியம் என்னவென்றால் இப்படத்தில் தமிழில் விஜய் ஹீரோ, மகேஷ் பாபு வில்லன் தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோ, விஜய் வில்லன் என்று ஏ ஆர் முருகதாஸ் தெரிவித்திருக்கிறார். இந்த சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

 vijay-play-negative-role-in-new-movie

vijay-play-negative-role-in-new-movie