சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார் பிரகாஷ்ராஜ் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நேற்று இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு மற்றும் ஜெயசுதா ஆகியோர் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் ஜெயசுதா விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே வம்சி இயக்கத்தில் வெளியான தோழா படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
