Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

Vijay made a sacrifice..Thambi Ramaiah's speech..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் வழக்கில் வருகிற 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனை படக்குழுவும் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், திரைப் பிரபலங்கள் அனைவரும் தளபதி விஜய்க்கு ஆதரவாக தங்களின் குரலை எழுப்பி வருகின்றனர். ‘ஜனநாயகன்’ எப்போது வெளியாகின்றதோ அன்றுதான் பண்டிகை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இச்சூழலில், விஜய் குறித்து, தம்பி ராமையா பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘விஜய் செய்ததை நான் தியாகம் என்று தான் சொல்வேன். உச்சத்தில் இருக்கும் விஜய், சினிமாவை விட்டு சென்றதை நான் தியாகமாக பார்க்கின்றேன். சினிமாவில் இருக்கும் அனைவரும் விஜய் இடத்திற்கு தானே ஆசைப்படுகின்றனர்.

அப்படி இருக்கும்போது, விஜய் அந்த இடத்தை விட்டுவிட்டு போவது ஒரு வித தியாகம் தானே, சினிமாவில் இருக்கும் பலருக்கு விஜய்யின் இடம் தான் ஆசையாக இருக்கின்றது. ஆனால், விஜய்யின் ஆசை வேறாக இருக்கின்றது’ என கூறியுள்ளார்.

Vijay made a sacrifice..Thambi Ramaiah's speech..!
Vijay made a sacrifice..Thambi Ramaiah’s speech..!