தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தளபதி விஜய் வேறு சில பிசினஸ்களையும் செய்து வருகிறார். அவற்றில் ஒன்றுதான் திருமண மண்டபங்களை நடத்தி வருவது. இவருக்கு சென்னையில் நீலாங்கரை, சாலிகிராமம் உள்ளிட்ட இடங்களை சொந்தமாக திருமண மண்டபம் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் புதுக்கோட்டையிலும் இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் இருக்கிறது.
இந்த மண்டபங்களை தற்போது ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களை நடத்த வாடகைக்கு விட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் விஜயின் மாத வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் விரைவில் இது பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-in-new-bussiness details

