‘நடிகன்’ படம் ரீமேக்கில் விஜய்?

வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ஜெமினி கணேசன் நடித்த நான் அவனில்லை, ரஜினிகாந்தின் மாப்பிள்ளை, பில்லா, தில்லுமுல்லு ஆகிய படங்கள் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன.

இந்த வரிசையில் பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ், கவுண்டமனி, மனோரமா ஆகியோர் நடித்து 1990-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற நடிகன் படத்தை ரீமேக் செய்யும் முயற்சி நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நடிகன் ரீமேக்கையும் பி.வாசுவே இயக்க இருப்பதாகவும், சிறிய மாற்றங்களுடன் இதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

நடிகன் படத்தின் ரீமேக்கில் விஜய்யை நடிக்க வைக்க பி.வாசு விரும்பினார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாகி இருப்பதாகவும், விஜய்யுடன் இதுகுறித்து பேசி சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2-ம் பாகம் படத்தை பி.வாசு இயக்க உள்ளார். கொரோனாவால் இதன் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

Suresh

Recent Posts

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…

1 hour ago

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…

1 hour ago

சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்?

சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…

1 hour ago

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்!

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு! மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்​னி​யின் செல்​வன்’ 2-ம் பாகம் படத்​தில்…

1 hour ago

அமரன் படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த ஃபிலிம் ஃபேர் விருது.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு…

4 hours ago