தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், ஸ்ரீகாந்த் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் கேட்க நடுவே தளபதி விஜய் ஹைதராபாத்தில் மகேஷ் பாபுவுக்கு சொந்தமான திரையரங்கில் நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் வெளியாகி உள்ள பிம்பிசாரா படத்தை பார்த்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vijay in Mahesh Babu Theatre