Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நெல்லை மக்களுக்கு நிவாரண உதவி செய்த விஜய்.வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து இதை அடுத்ததாக அரசியலில் இறங்க ஆயத்தமாக உள்ளார். இதற்காக இரண்டு வருடங்களுக்கு படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியல் சார்ந்த வேலைகளை செய்யப்போவதாக தகவல் வெளியானது.

அதற்கேற்றார் போல கலந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கியதை தொடர்ந்து இன்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க திருநெல்வேலி சென்றுள்ளார்.

1500 குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்களை வழங்கும் விஜய் வந்திருந்தவர்கள் யாரையும் எழுந்துக்க விடாமல் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று நிவாரண பொருட்களை கொடுத்த விஷயம் நெல்லை மக்களை நெகிழ வைத்துள்ளது.

இதெல்லாம் விஜயின் அரசியல் அச்சாரமாக பார்க்கப்படுகிறது என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

Vijay helps to nellai peoples
Vijay helps to nellai peoples