vijay-gave-a-pleasant-surprise-to-his-fans
தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே பெற்றிருக்கும் இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ரஞ்சிதமே என்ற பாடலின் வீடியோ நேற்று மாலை இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்பாடல் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரசிகருக்கு விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதாவது நடிகர் விஜய் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எடிட் செய்த புகைப்படத்தை dp யாக வைத்து அவரை மகிழ்ச்சியடைய செய்திருந்தார் அதேபோல் தற்போது நேற்று வெளியான ரஞ்சிதமே பாடலை புகழ்ந்து ரசிகர் ஒருவர் ட்விட் செய்திருந்தார் தற்போது அந்த ட்விட்டை நடிகர் விஜய் லைக் செய்து அந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். ட்விட்டரில் இணைந்து ஒன்பது வருடங்களில் விஜய் செய்த முதல் லைக் இது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…