கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக வளம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இதில் தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் தயாராகி வருகிறது. அதேபோல் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேராக மோதிக்கொள்ள இருக்கிறது. இதனால் இப்படங்களின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறி வருகிறது.
இந்நிலையில் துணிவு படம் வெற்றி பெற வேண்டும் என்று சபரிமலையில் பேனருடன் சென்று அஜித் ரசிகர்கள் அண்மையில் வேண்டுதல் செய்துள்ளனர். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது விஜயின் வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்காக விஜய் ரசிகர்களும் வாரிசு பேனருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தற்போது அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
pictures speaks????????@actorvijay#varisu #VarisuPongal2023 pic.twitter.com/BTga0ejjUI
— ᴛʜᴇʀɪ ᴅʜᴀɴᴜsʜ???? (@Kdfreakzzz1) November 29, 2022

