நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஷாலின் ‘எனிமி’ படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படம் இந்த ஆண்டு கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நிறைவு பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
We’re glad to share that @RedGiantMovies_ will be releasing #ROMEO in Tamil Nadu????????
Stay tuned for a #BLOCKBUSTER experience????
See you this summer ❤@vijayantonyfilm @mirnaliniravi @actorvinayak_v @prorekha @gobeatroute pic.twitter.com/pypHiySKcm
— vijayantony (@vijayantony) January 29, 2024