Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் சந்திக்கப் போகும் அஜித் விஜய் காரணம் என்ன தெரியுமா.? சூப்பர் ஹிட் தகவல்

vijay and ajith will meet shooting spot update

கோலிவுட் திரை வட்டாரத்தில் டாப் சூப்பர் ஹீரோக்களாக மாஸ் காட்டி வரும் நடிகர்கள்தான் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவருக்கும் இடையே படங்கள் ரீதியான போட்டிகள் இருந்தாலும் நிஜத்தில் இருவருமே நெருங்கிய நண்பர்களாக தற்போது வரை இருந்து வருகின்றனர். மேலும் அவர்களது ரசிகர்களிடையே நடக்கும் கருத்து மோதல்களை இருவரும் எப்பொழுதும் ஆதரித்தது இல்லை.

மேலும் விஜய், அஜித் இருவரும் ஏற்கனவே மங்காத்தா மற்றும் வேலாயுதம் படப்பிடிப்பு ஒரே செட்டில் நடந்த போது இருவரும் சந்தித்திருந்தனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வரை இணையத்தில் ரசிகர்களின் பேவரைட் புகைப்படமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பின் பீஸ்ட் திரைப்பட படப்பிடிப்பும் வலிமை படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்றது. இருவரும் சந்திப்பார்கள் என ரசிகர்களின் இடையே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சந்திக்கவில்லை.

இந்நிலையில் தளபதி விஜய் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். அதேபோல் தல அஜித் குமாரும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் AK61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விசாகபட்டணத்தில் நடந்து வரும் நிலையில் அஜித்தும், விஜய்யும் நேரில் சந்திக்க உள்ளனர் என்ற தகவல் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த தகவலின் உண்மையாகவே நடந்துவிட்டால் ரசிகர்களின் கனவு நிறைவேறியது மட்டுமின்றி அந்த புகைப்படங்கள் வெளியானால் சமூக வலைத்தளமே கொண்டாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay and ajith  will meet shooting spot update
vijay and ajith will meet shooting spot update