Vijay 66 Movie Latest Update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கிறார். தில் ராஜு படத்தை தயாரிக்க வம்சி இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் தொடங்கியுள்ளது. முதலில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரையும் வைத்து பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இதற்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அடுத்தடுத்த படங்களில் விஜய் நடித்து வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…