Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாரா குறித்து உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

vignesh-sivan-post-emotional-video

இந்திய திரை உலகில் பிரபல நட்சத்திர தம்பதியினராக திகழ்ந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

என் தங்கத்துடன் இது 8வது முறை!!… விக்கியின் உணர்ச்சிகரமான வீடியோ பதிவு!.
அதன் பிறகு இரண்டு முறை ஹனிமூன் சென்று விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து இணையத்தை தெறிக்க விட்டனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி விக்னேஷ் சிவனின் 37 வது பிறந்தநாள் அன்று நயன்தாரா அவரை துபாய் அழைத்து சென்று சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் துபாயில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் நயன்தாரா குறித்து உணர்ச்சிகரமான பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என் தங்கத்துடன் சேர்ந்து நான் கொண்டாடும் 8வது பிறந்தநாள் இது, எனது ஒவ்வொரு பிறந்த நாளையும் அதற்கு முந்தைய பிறந்தநாளை காட்டிலும் எனக்கு நயன் சிறப்பாக மாற்றியுள்ளார். இது மிகவும் உணர்ச்சிகரமானது, இன்னும் பல ஆண்டுகள் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்றும் உன்னை நேசிப்பேன் நன்றி” என அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.