விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
படப்பிடிப்பு மே மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி தொடங்க முடியாமல் போனது.
இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித் குமார், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆனால் நடிகைகள் சமந்தா, நயன்தாரா ஆகியோர் இதில் கலந்துகொள்ளவில்லை. விரைவில் அவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
My Favourite script with my favourite people begins today 🙂 thanking God & universe for making it happen 🙂
Thank U for all the good will & wishes????#KaathuVaakulaRenduKaadhal begins today ???????? @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @anirudhofficial @7screenstudio pic.twitter.com/ezCx5gK3db— Vignesh Shivan (@VigneshShivN) December 10, 2020