தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 31ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
திரையரங்குகளில் ரசிகர்களால் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் இப்படத்தை ரஜினி உட்பட திரைபிரபலங்கள் பலரும் தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில் இப்படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த “காட்டு மல்லி” என்னும் பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
#ViduthalaiPart1 Beautiful Video Song #Kaattumalli Out Now????✨
Link – https://t.co/zQBjW2KSOHStars : VJS – Soori – Bhavani Sre – GVM – Bala Haasan – kishore – Chetan
Music : Isainani Ilaiyaraaja
Direction : Vetrimaaran (VadaChennai)Successfully into 3rd WEEK. pic.twitter.com/ChkeG4B8eD
— Saloon Kada Shanmugam (@saloon_kada) April 20, 2023