Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விடுதலை ஷூட்டிங் ஸ்பாட்டில் சூரி. ஸ்டண்ட் காட்சி வீடியோ வைரல்.

viduthalai movie part1-dedication-video-of-soori

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்திற்காக நடிகர் சூரி பலமான காயங்களுடன் துணிச்சலாக செய்திருக்கும் ஸ்டண்ட் காட்சிகளின் வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைத்து வைரலாகி வருகிறது.