தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இதில் இப்படத்தின் முதல் பாகத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த ப்ரோமோ நேற்று வெளியாகி உள்ளது.
அதன்படி, இளையராஜா இசையில் முதல் முறையாக நடிகர் தனுஷ் பாடி இருக்கும் ‘ஒன்னோட நடந்தா’ என்னும் பாடல் வரும் 8 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு சிரியா ப்ரோமோவுடன் வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து அப்பாடலின் இரண்டாவது ப்ரோமோவையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதுவும் தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
Another glimpse into the making of #Onnodanadandhaa
Song out tomorrow at 11am, set a reminder. #Viduthalai part 1 @ilaiyaraaja @dhanushkraja #AnanyaBhat #Suga#Vetrimaaran @elredkumar @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @mani_rsinfo pic.twitter.com/zmZjQwsLGz
— Red Giant Movies (@RedGiantMovies_) February 7, 2023