Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விடுதலை படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட படக்குழு..வைரலாகும் பதிவு

-viduthalai has-been-selected-for-the-rotterdam-film-festival

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் \”லைம்லைட்\” பிரிவில் திரையிட தேர்வாகி இருப்பதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதம் 25-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

viduthalai has-been-selected-for-the-rotterdam-film-festival
viduthalai has-been-selected-for-the-rotterdam-film-festival