vidamuyarchi movie shooting update
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் தற்போது வரை படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
இப்படம் கைவிடப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் தேதி அபுதாபியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறையாவது படப்பிடிப்பு தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் உள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…