jailer-movie-50 days celebration photo
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சமூக வலைதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் 50-வது நாளை ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், படம் பார்க்க வந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை ரஜினி ரசிகர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash