தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
The schedule of Azerbaijan wrapped up. Team heading to a new location in few days. #VidaaMuyarchi #AK pic.twitter.com/WBOJodm1Gn
— Suresh Chandra (@SureshChandraa) January 29, 2024
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சில நாட்களில் வேறு இடத்திற்கு செல்ல உள்ளதாக படக்குழு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Done with the AZERBAIJAN ???????? schedule! The VIDAA MUYARCHI team has wrapped up & is gearing up for a new adventure at a new location. ????????#VidaaMuyarchi #AjithKumar #MagizhThirumeni @anirudhofficial @trishtrashers @akarjunofficial @ReginaCassandra @Aravoffl @omdop… pic.twitter.com/CTbAIDkOpf
— Lyca Productions (@LycaProductions) January 29, 2024

