கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல காதல் தம்பதியினராக அனைவருக்கும் பரிச்சயம் மாணவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்களது திருமணம் சென்னையில் ஜூன்9 ஆம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ரஜினிகாந்த், சூர்யா, விஜய் சேதுபதி, ஷாருக்கான், அனிருத், மணிரத்தினம் போன்று பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்த திருமண நிகழ்ச்சியின் வீடியோ, புகைப்படங்களை பிரபல OTT-தளமான நெட்ப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது. இதனால், திருமணத்திற்கு வருபவர்கள் தங்களது போன்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க கூடாது என்ற நிபந்தனைகளும் வைக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு நெட்ப்ளிக்ஸ் OTT-தளம் நயன்தாரா -விக்னேஷ் சிவனுடைய திருமண புகைப்படங்களை சமீபத்தில் வெளீயிட்டு விரைவில் திருமணத்தின் முழு வீடியோவும் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் எப்போது அந்த வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான ஒரு ப்ரோமோ வீடியோவை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசியுள்ளார்கள். அதில் முதலில் பேசிய நயன்தாரா நான் என்னுடைய வேலையை மட்டுமே நம்புவேன், எங்களை சுற்றி காதல் எப்போவுமே இருந்து கொண்டு இருக்கும்” என நயன்தாரா கூறியுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் “ஒரு பெண்ணாக அவர் ஓர் முன்னுதாரணம். அவர் மனதும் அழகு வெளித்தோற்றமும் அழகு” என புகழந்து பேசியுள்ளார். இவர்களது இந்த அழகான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cue the malems cos we're ready to dance in excitement????
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022