Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 69 படம் குறித்து வெற்றி மாறன் சொன்ன தகவல், முழு விவரம் இதோ

vetri-maaran-about thalapathy vijay-69-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வரும் இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து நடித்த ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் அதன் பிறகு திரை உலகிற்கு டாட்டா சொல்ல இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜயின் கடைசி படத்தை இயக்கப் போவது யாரு என பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

அதில் வெற்றி மாறனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வெற்றி மாறன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது நான் விஜயை இயக்கப் போவதாக பரவிய தகவலை பார்த்தேன். அவரும் அதை பார்த்திருப்பார் என நினைக்கிறேன். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய், வெற்றிமாறன் கூட்டணி அமையுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம் விஜயின் கடைசி படத்தை இயக்கப் போவது எச் வினோத் தான். இது 90% உறுதியான இன்னொரு தகவல் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

vetri-maaran-about thalapathy vijay-69-movie
vetri-maaran-about thalapathy vijay-69-movie