குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெப்பன்’ . இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி மற்றும் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘வெப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல தம்பதிகள். இவர்களுக்கு தற்போது இரட்டை…
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழுக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத்…
நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல்…
நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘பில்லா’ (2007), மீண்டும் ரசிகர்களை கவர திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது.…
Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…