‘ஜனநாயகன்’ சர்ச்சைக்கு பின்… ரஜினியின் ‘ஜெயிலர் 2’ காட்சிகளும் கசிவு!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழுக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜனநாயகன்’ கசிவு விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்னும் அடங்காத நிலையில், தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று ஆன்லைனில் கசிந்துள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் காட்சிகள் வெளியானது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எங்கள் திருட்டு தடுப்பு குழு இந்த நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த வீடியோக்களை பகிர்வது அல்லது பரப்புவது தொடர்பான கணக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதனை அகற்ற தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். எனவே, யாரும் இந்த காட்சிகளை பகிரவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

திரைப்பட கசிவுகள் மீண்டும் அதிகரிப்பதால், பாதுகாப்பு குறித்து புதிய கவலை எழுந்துள்ளது.

Suresh

Recent Posts

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

8 hours ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

8 hours ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

8 hours ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

8 hours ago

“பரோட்டா சூரி மாதிரி கோட்ட அழிக்க வைக்காதீங்க!” – நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…

8 hours ago

“நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்!” – வெங்கட் பிரபுவின் X பதிவு வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…

1 day ago