‘Billa’ to re-release in theatres on Ajith’s birthday!
நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘பில்லா’ (2007), மீண்டும் ரசிகர்களை கவர திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படம் நவீன 4K தொழில்நுட்பத்தில் மெருகேற்றி, வரும் மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த படம், வெளியான காலத்தில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
மேலும், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இடம்பெற்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் பேவரிட் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அஜித்துடன் நயன்தாரா, நமீதா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், ஸ்டைலிஷ் மேக்கிங் மற்றும் அஜித்தின் மாஸ் ஸ்கிரீன் பிரசன்ஸ் காரணமாக தனித்துவமான இடத்தை பெற்றது.
ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தனது ஸ்டைலிலும் நடிப்பிலும் அஜித் புதிய பரிமாணத்தை காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
குறிப்பாக, இந்த படம் ஏற்கனவே 2021ஆம் ஆண்டிலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் ‘பில்லா’ – திரையரங்கில் திருவிழா காத்திருக்கிறது!
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…