வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி மதராசி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்
மதராசி திரைப்படம் செப்டம்பர் மாதமும் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் கொடுத்த அப்டேட் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார்.
அதாவது தலைவன் தலைவி பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படம் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் அக்டோபரில் தொடங்கும் என்றும் அப்டேட் கொடுத்துள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
