Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 68 படத்தை இயக்குவதற்கு வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்

Venkat Prabhu Salary for GOAT Movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் லியோ. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கோட் என்றால் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனவும் படக்குழு விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கோட் திரைப்படத்திற்காக வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில் வெங்கட் பிரபு இந்த படத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரிய வந்துள்ளது.

Venkat Prabhu Salary for GOAT Movie
Venkat Prabhu Salary for GOAT Movie