சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் வெங்கட் பிரபு.
இப்படத்திற்கு பின்பு தல அஜித்தை வைத்து மங்காத்தா, சூர்யாவை வைத்து மாஸ் என்கிற மாசிலாமணி என பல முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்து வந்தார்.
தற்போது சிம்புவை வைத்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் மாநாடு படத்தை தொடர்ந்து இவர் இயக்கவிருக்கும் படத்தில் அசோக் செல்வன் நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு மூச்சாக நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

