தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி, மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சென்றுள்ள வெங்கட் பிரபு அஜித்தை சந்தித்துள்ளார்.
இவர்களது சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இதை பார்த்த ரசிகர்கள் மங்காத்தா கூட்டணி மீண்டும் உருவாகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அஜித் ஓகே சொன்னால் மங்காத்தா 2 எடுப்பேன் என வெங்கட் பிரபு கூறி வரும் நிலையில் இந்த சந்திப்பு அதற்கான கண்டிப்பாக இருக்குமோ என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
