தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் இடத்தில் நடித்து வருகிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். படத்திலிருந்து முதல் சிங்கிள் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த உலகில் மிகப்பெரிய தனது 17 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அப்போது ஒருவர் செகண்ட் சிங்கிள் ட்ராக் எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை கவனித்த வெங்கட் பிரபு ஜூன் மாதத்தில் என பதில் அளித்துள்ளார். இதனால் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் விநாயகர் சதுர்த்தி விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
GOAT Next Single Eppo bro @vp_offl ?
— Tharani ᖇᵗк (@iam_Tharani) April 27, 2024