Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர்நீச்சல் சீரியல் பற்றி அப்படி சொல்லவே இல்லை : வேலராமமூர்த்தி விளக்கம்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சமீபத்தில் முடிவுக்கு வந்த இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

இதையடுத்து மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு இந்த சீரியலில் ஆதி குணசேகரன் ஆக வேலராமமூர்த்தி நடிக்க தொடங்கினார். ஆனால் மாரிமுத்துவின் இடத்தை இவரால் ஈடு செய்ய முடியவில்லை.

இப்படியான நிலையில் சீரியல் முடிந்ததற்கு பிறகு வேலராமமூர்த்தி இந்த சீரியலில் நடித்தது தனக்கு பெரிய அவமானம் என பேசியதாக தகவல் ஒன்று பரவியது.

இந்த நிலையில் வேலராமமூர்த்தி அளித்த பேட்டி ஒன்றின் நான் பேசியதாக பரவிய தகவல் முழுக்க முழுக்க வதந்தி என தெரிவித்துள்ளார். தமிழக மக்களிடம் என்னை கொண்டு போய் சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான். ஆகையால் நான் இந்த சீரியல் பற்றி அப்படி சொல்லவே இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Vela ramamoorthi about ethir Neechal Serial
Vela ramamoorthi about ethir Neechal Serial