தலைமுடி அடர்த்தியாக வளர சில காய்கறிகளை நாம் சாப்பிடலாம். அது என்னென்ன என்று பார்க்கலாம்.
பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்களால் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது அதில் ஒன்றுதான் முடி உதிர்வது.
பெரும்பாலும் பலருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. நம் ஆரோக்கியமான உணவு முறைகளை உட்கொள்வதன் மூலமாகவே இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு நாம் முதலில் சாப்பிட வேண்டிய காய் பீன்ஸ். பீன்ஸில் இருக்கும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் முடியை அடர்த்தியாக வளர உதவுகிறது.
மேலும் பசலைக் கீரையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்பு சத்து இருப்பதால் முடி வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும்.
மே இது மட்டும் இல்லாமல் கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இது முடி பிரச்சனை இல் இருந்து நம்மை விலக்கி முடி வளர உதவுகிறது.
முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர மிக முக்கியமான ஒன்று கறிவேப்பிலை. இதை காலையில் வெறும் வயிற்றில் என்று சாப்பிட்டு வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர்வது உறுதி.