தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பு மட்டும் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் அறிமுக இயக்குனர் து.பா சரவணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் வீரமே வாகை சூடும்.
சாதாரண சாமானிய மனிதனுக்கு அரசியல்வாதி ஒருவருக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் தான் இந்த படத்தின் கதை. ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமான சூழ்நிலையை எப்படி கையாண்டு அதில் இருந்து மீண்டு வருகிறார் என்பதைச் சொல்வதுதான் வீரமே வாகை சூடும் படத்தின் கதை களம்.
படத்தை பற்றிய அலசல் :
வழக்கம்போல் விஷால் தன்னுடைய அசத்தலான நடிப்பாலும் ஆக்ஷனில் பின்னி பெடலெடுத்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளார்.
நாயகியாக நடித்துள்ள டிம்பிள் ஹைடாரி அவருடைய கதாபாத்திரத்தை மிகவும் அழகாக நடித்து கொடுத்துள்ளார்.
படத்தில் இடம்பெற்றுள்ள மாரிமுத்து, இளவரசன், யோகி பாபு என அனைவரும் அவரது வேலைகளை கச்சிதமாக செய்து கொடுத்துள்ளனர்.
இசை :
விஷால் ஒரு ஒரு பக்கம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்து இருப்பது போல யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை இன்னொரு பக்கம் பலமாக கை கொடுத்துள்ளது.
ஒளிப்பதிவு :
கவின் ராஜின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
எடிட்டிங் : என் பி ஸ்ரீகாந்த் அவர்களின் எடிட்டிங் கனகச்சிதம்.
இயக்கம் :
து.ப சரவணன் அறிமுக இயக்குனராக இருந்தாலும் சாதாரண கதையை கையில் எடுத்து அதை திரைக்கதை மூலம் மிகவும் சுவாரசியமாகவும் ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இயக்கியுள்ளார்.
கதை சிம்பிள் தான் ஆனால்?? விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் முழு விமர்சனம்.!!
படத்தின் ப்ளஸ் :
1. விஷாலின் நடிப்பு
2. யுவன் சங்கர் ராஜாவின் இசை
3. சண்டைக்காட்சிகள்
4. திரைக்கதை
படத்தின் மைனஸ் : முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் வேகத்தை கூட்டியிருக்கலாம்.


