Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“வீரா” சீரியலின் ப்ரோமோவால் அப்செட்டான சிப்பு சூரியன் ரசிகர்கள். காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிப்பு சூரியன். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீசன் 2 சீரியலில் நடித்த இவருக்கு அந்த சீரியல் பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை.

இதன் நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் பரவ அவரது ரசிகர்கள் இந்த சீரியலுக்காக ஆவலோடு காத்திருந்தனர்.

இப்படி அந்த நிலையில் வீரா என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியல் குறித்த புரோமோ வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோவில் சிப்பு சூரியன் பேரன்பு வைஷ்ணவிக்கு அண்ணாவாக நடிப்பது தெரிய வந்தது.

அவர் ஹீரோ இல்லை என்பது ஒரு ஷாக் என்றால் அவர் இறந்து விடுவது போன்ற காட்சி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Veera serial promo update
Veera serial promo update