தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன்முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது அப்பா மகன்களின் கதையாக இந்த இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் மீனாவாக நடித்து வரும் ஹேமாவுக்கு ஜோடியாக செந்தில் என்ற கதாபாத்திரத்தில் வசந்த் வசி நடித்து வந்தார். திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் செந்திலாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த நிலையில் வசந்த் வசி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். புது செந்திலாக நடித்து வரும் வெங்கட்டும் லைக் செய்துள்ளார்.
View this post on Instagram