வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களும் சமீபத்தில் நடைபெற்ற ஆடியோ லாஞ்சில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தில் அதிர விட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் ட்ரெய்லர் குறித்த புதிய அப்டேட் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது வாரிசு படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்ற தகவலை போஸ்டருடன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#Varisu Trailer Tomorrow..???????????? pic.twitter.com/sNdAJKF6DL
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 3, 2023

