வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆடியோ லாஞ்சில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தில் அதிர விட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில், வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை inஜனவரி 1ஆம் தேதியான நாளை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படகுழு புதிய போஸ்டர் மூலம் வெளியிடலாம் என்று புதிய தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த தகவலை இணையதளத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
#Varisu Trailer Update On Tomorrow With Poster #VarisuTrailer Releasing On Jan 2
???? Enimathan Enga Aatam Arambam ???? pic.twitter.com/Jj8On0Uscg— ʜᴀʀɪꜱʜ ᴠᴊ (@Harish__VJ) December 31, 2022