தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளது.
தெலுங்கு இயக்குனர் தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் இணையதளத்தை தெறிக்க விட்டதை தொடர்ந்து இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு இணையதளத்தை தெறிக்க விட்டு வரும் நிலையில் தெலுங்கிலும் இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் ஆரம்பமாகி சூடு பிடித்து வருகிறது. அதன்படி வாராசுடு என்று தெலுங்கில் ஒட்டப்பட்டுள்ள பேனர்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகிய ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
#Vaarasudu posters with Telugu Logo⚡ Sankranti Release. @actorvijay pic.twitter.com/eQ1ke4OqJ0
— Vijay Fans Updates (@VijayFansUpdate) December 17, 2022