கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக வெளியான இப்படம் சில பகுதிகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் வேட்டையாடி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் OTT உரிமையை கைப்பற்றி இருக்கும் அமேசான் ப்ரைம் நிறுவனம் இப்படத்தை பிப்ரவரி மாதம் 8 அல்லது 10 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘வாரிசு” திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் சூப்பரான தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#Varisu OTT Premiere On Amazon From Feb 8 or 10 Pay Per View
Tamil | Telugu #VarisuPongalWinner #VarisuPongal pic.twitter.com/wSyYBpHpwz
— Tamil TV Channel Express (@TamilTvChanExp) January 19, 2023
#Varisu OTT Premiere On Amazon From Feb 8 or 10 Pay Per View
Tamil | Telugu #VarisuPongalWinner #VarisuPongal pic.twitter.com/wSyYBpHpwz
— Tamil TV Channel Express (@TamilTvChanExp) January 19, 2023