Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் கசிந்த வாரிசு BGM..படகுழு செய்த செயல்..வைரலாகும் தகவல்

varisu-song-leaked-with-bgm

ரசிகர்களால் இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், சங்கீதா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுக் வருகிறது. அதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் வம்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என கண்டிஷன் போட்டார்.

இருந்தாலும், வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் வாரிசு திரைப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து ஆடியுள்ள பாடலின் சிறிய வீடியோ BGM உடன் இணையத்தில் வெளியானது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த வீடியோவை பட குழுவினர் பிளாக் செய்து விட்டனர். இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

varisu-song-leaked-with-bgm
varisu-song-leaked-with-bgm