தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தினை வம்சி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் தமன் இசையில் உருவாகி இருந்த ரஞ்சிதமே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்பாடலின் வீடியோ இணையதளத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
#Ranjithame smashes 40M views now!!
Let the vibe continue ????????️ https://t.co/Q56reRe9tc
???? https://t.co/gYr0tkVJkD#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/gEW6sgoWFC— Sri Venkateswara Creations (@SVC_official) November 11, 2022