தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி ஆக வளம் வருபவர் தான் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடல் இந்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், விஜய் இப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு அவர்களின் குழந்தையை மடியில் வைத்து கொஞ்சும் க்யூட் புகைப்படம் வெளியாகி உள்ளது. அப்புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

varisu movie vijay-latest-cute-photo

