Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடரும் நெகட்டிவ் விமர்சனங்களால் செகண்ட் சிங்கிள் ட்ராக் குறித்து படக்குழு எடுத்த முடிவு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

varisu movie team-decison-on-second-single-track

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடம்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் குடும்பப்பாங்கான படமாக உருவாகியுள்ளது.

தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து விஜய்யின் குரலில் ரஞ்சிதமே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்த படம் மொச்ச கொட்ட கண்ணழகி என்ற பாடலின் காப்பி என விமர்சனங்கள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் மேலும் பல பாடல்கள் இதே போன்று ஏற்கனவே வெளியாகியிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படக்குழு வெகு விரைவில் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிட முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் டூப்பர் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

varisu movie team-decison-on-second-single-track
varisu movie team-decison-on-second-single-track