Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் கதை இதுதானா? வைரலாகும் சூப்பர் தகவல்

varisu-movie-story update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில் இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்து தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அதாவது, எந்த ஒரு கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இளைஞர் தான் தளபதி விஜய். ஒரு கட்டத்தில் அவருடைய வளர்ப்பு தந்தை மரணம் அடைந்துவிட அதன் பிறகு அவருடைய அனைத்து பிசினஸ் செய்யும் கவனிக்கும் பொறுப்பு தளபதி விஜய்க்கு வருகிறது. கோடிக்கணக்கில் மதிப்புள்ள இந்த பிசினஸை தளபதி விஜய் கவனிக்கும்போது அதில் இருக்கும் எதிர்ப்புகளை மீறி அவர் எப்படி வெற்றி காண்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

இந்த கதையை பார்த்த ரசிகர்கள் ஓ இதுக்கு தான் வாரிசு என டைட்டில் வைத்தார்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

varisu-movie-story update
varisu-movie-story update